குடிநீர் குழாயை திறந்ததும் கொட்டிய மதுபானம்..! அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்..!

371

கேரள மாநிலத்தில் சாலக்குடி பகுதி அருகே உள்ள மதுபான விடுதி ஒன்றில் மதுபானங்களை கலால்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

ஏறத்தாழ 6 ஆயிரம் லிட்டர் பியர், பிராந்தி மற்றும் ரம் ஆகியவற்றை அப்புறப்படுத்த முடிவு செய்த கலால்துறையினர், அதே பகுதியில் உள்ள ஓர் இடத்தில் குழி தோண்டி மொத்த மதுபானங்களையும் புதைத்துள்ளனர்.

இந்த மதுபானம் அங்கு பதிக்கப்பட்டிருந்த குடிநீர் பைப்லைனில் கலந்துள்ளது. இதனால் அங்குள்ள வீடுகளில் உள்ளவர்கள் குடிநீருக்காக வீட்டுக் குழாயைத் திறக்கும் போது மதுபானம் வந்துள்ளது.

குடிநீர் குழாயைத் திறக்கும் போது, பழுப்பு நிறத்தில் வந்த தண்ணீரை நுகர்ந்து பார்த்தால் மதுபான வாசனை வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த குடியிருப்புவாசிகள் காவல்துறையிடமும், நகராட்சி நிர்வாகத்திடமும் புகார் அளித்தனர்.

தமது தவறை உணர்ந்த கலால்துறையினர் அந்த பகுதி குடியிருப்புவாசிகளுக்குத் தற்காலிகமாகக் குடிநீர் வழங்கியுள்ளனர். கலகலப்பு திரைப்படத்தில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகக் குழாய் மூலமாக மதுபானம் வழங்குவது போல ஒரு காட்சி வரும். இப்போது அந்தக் காட்சி கேரளாவில் நிஜமாகி உள்ளது.