பெண் வேடத்தில் மது பாட்டில்கள் கடத்திய நபர் கைது

239

தெலங்கானாவில் இருந்து ஆந்திராவுக்கு பெண் வேடத்தில் மது கடத்தியவர் உட்பட 5 பேர் போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கினர்.

ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள பஞ்சலிங்கால சோதனைச் சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில், நபர் ஒருவர் பெண் வேடத்தில் புர்கா அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார், அந்த நபரை சோதனை செய்ததில், அவர் பெண் அல்ல, ஆண் என்பது தெரியவந்தது.

இதேபோல் தெலங்கானாவில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்த மேலும் 4 பேரை கைது செய்த போலீசார், 304 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். சட்டவிரோதமாக மது கடத்திய குற்றத்திற்கான 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.

Advertisement