சாராய பாக்கெட்களை சாலையில் உடைத்த மக்கள்.

187

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த ஆக்கூர் மடப்புரம் கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளாக கள்ள சாராய விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்களும் பள்ளி மாணவிகளும் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

தூண்டி என்கிற பாலகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் சாராய விற்பனை செய்வதாக பல முறை அப்பகுதி பொதுமக்கள் காவல்துறை மற்றும் வருவாய்த் துறைக்கு புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டித்து பல போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை எடுக்காததால் இன்று மடப்புரம் மெயின்ரோட்டில் திரண்ட பொதுமக்கள்; விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சாக்குமூட்டையில் இருந்த சாராய பாக்கெட்டுகளை கைப்பற்றி சாலையில் உடைக்க முயன்றனர்.

Kalla-Sarayam-at-Nagai2

சம்பவம் அறிந்து வந்த செம்பனார்கோவில் போலீசார் பொதுமக்களிடம் இருந்த சாராய பாக்கெட்டுகளை கைப்பற்றி எடுத்து செல்ல முயன்றனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து பொதுமக்கள் சாராய பாக்கெட்டுகளை போலீசாரிடம் இருந்து பிடுங்கி சாலையில் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டுவரும் தூண்டி என்கிற பாலகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்து நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று பொதுமக்கள் எச்சரித்தனர். இதே பகுதியல் கடந்த ஆண்டு சாராய பாக்கெட்டுக்களை சாலையில் உடைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of