“கர்நாடகா மக்களே எச்சரிக்கையா இருங்க” – வானிலை ஆய்வும் மையம்

273

கர்நாடகாவில் கனமழை பெய்து வரும் நிலையில் குடகு உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வட கர்நாடக மாநிலங்களான சிவமோகா, பெலகாவி, ஹவேரி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் மழை தொடரும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வும் மையம், வடக்கு கர்நாடகா மற்றும் குடகு உள்ளிட்ட 7 மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மிக அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது.