ஏலியன் ஏன்ட் நோய் பற்றி தெரியுமா..? சொல் பேச்சை கை கேட்காது!

1112

முன்னுரை:-

நீங்கள் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது உங்களின் கை அந்த சாப்பாட்டை தட்டி விடும், உங்களின் ஒரு கை சட்டையின் பட்டனை போட்டுக்கொண்டிருந்தால், மற்றொரு கை சட்டையின் பட்டனை அவிழ்த்துக்கொண்டிருக்கும்.

இவ்வாறு நம் கட்டுப்பாட்டின் கீழ் நமது கை இல்லாமல் இருந்தால் அதன் பெயர் தான் ஏலியன் ஹேண்ட் சின்ரோம். இந்த நோய் லட்சத்தில் ஒருவருக்கு ஏற்படக்கூடிய ஒரு நோய் ஆகும். இதுகுறித்து முக்கிய தகவல்களை தற்போது பார்க்கலாம்.

ஏலியன் ஏன்ட் சின்ரோம் என்றால் என்ன..?

நம் உடலில் உள்ள அணைத்து உறுப்புகளும் நரம்புகள் மூலம் சேர்ந்து, மூளையில் இணைக்கப்பட்டுள்ளது. மூளையின் கட்டளையை கேட்டு உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளும் செயல்படுகின்றனர்.

இந்நிலையில் ஏதாவது விபத்தின் போது மூளையில் சிறிது அதிர்ச்சி ஏற்படும் போது நரம்புகள் பாதிக்கப்பட்டு, உறுப்புகளின் இயக்கங்கள் பிரச்சனைகளுக்கு உள்ளாகுகின்றன.

இவ்வாறு கைகளின் நரம்புகளில் அதிர்வுகள் ஏற்படும் போது வருவது தான் இந்த ஏலியன் ஏன்ட் சின்ரோம். இந்த நோய் வருபவர்களுக்கு பெரும்பாலும், இடது கை தான் கட்டுப்பாடின்றி இருக்கும்.

அறிகுறிகள்:-

1. இதன் அறிகுறிகளை நோயால் பாதிக்கப்பட்டவரால் உணர முடியும். அதே நேரத்தில் அவரின் செயல்கள் உடனிருப்பவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தும்.

2. இடது அல்லது வலது கை உடலுடன் இருந்தாலும், அது இல்லாதது போன்ற உணர்வு.

3. தொடர்ந்து, ஒரே வேலையை ஒரு கை மட்டும் செய்துகொண்டிருப்பது.

4. பொருள்களை இடம் மாற்றி வைத்தல்.

காரணங்கள்:-

மூளையில் அறுவைசிகிச்சை, அந்த அறுவை சிகிச்சை தோல்வியில் முடிவது, பக்கவாதம், மூளைத்தொற்று, மூளைக்கட்டி, ரத்தம் உறைதல் மற்றும் மூளைச் செயல்பாட்டில் குறைபாடுகள் போன்றவற்றால் மூளையில் உள்ள நரம்புகளில் பாதிப்புகள் ஏற்படும்போது, ஏலியன் ஹேண்ட் சிண்ட்ரோம் ஏற்படும்.

மூளை நரம்புகளுடன் கைகள் நேரடியாக இணைக்கப்பட்டிருக்கும். ஆகையால், மூளையில் சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும், அவற்றின் பிரதிபலிப்பு முதலில் வருவது கைகளுக்குத்தான். எனவே மூளையில் ஏற்படும் பாதிப்புக்கு முதலில் பாதிக்கப்படுவது கைகள் தான் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of