காந்தியடிகளின்  உருவபொம்மையை துப்பாக்கியால் சுட்ட இந்து மகா சபையை சேர்ந்த பூஜா பாண்டே கைது!

184

உத்தரப்பிரதேசத்தில் காந்தியடிகளின்  உருவபொம்மையை துப்பாக்கியால் சுட்ட விவகாரத்தில் இந்து மகா சபையை சேர்ந்த பூஜா பாண்டே மற்றும் அவரது கணவர் அசோக் பாண்டே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.காந்தியடிகளின் நினைவு தினமான கடந்த 30-ம் தேதி, காந்தியை கோட்சே துப்பாக்கியால் சுட்ட சம்பவத்தை நினைவுப்படுத்தும் சம்பவம் உத்தரப்பிரதேசம் மாநிலம் அலிகாரில் இந்து மகா சபை அலுவலகத்தில் நடத்தப்பட்டது. அப்போது காந்தியின் உருவபொம்மையை வைத்து, அந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவரான பூஜா சகுண் பாண்டே துப்பாக்கியால் சுட்டார்.

அதோடு காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.இதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து காந்தியடிகளின்  உருவபொம்மையை சுட்ட 13 பேர் மீது அலிகார் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் இந்து மகா சபையை சேர்ந்த பூஜா பாண்டே, மற்றும் அவரது கணவர் அசோக் பாண்டேவை போலீஸார் கைது செய்துள்ளனர்.