கர்நாடகாவில் அனைத்து மந்திரிகளும் ராஜினாமா!

479

கர்நாடகா மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசில் இடம்பெற்றிருந்த 21 காங்கிரஸ் மந்திரிகள் தாமாக முன்வந்து தங்களது பதவியை இன்று ராஜினாமா செய்ததாக சித்தராமையா தெரிவித்தார்.

இந்நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த ரேவண்ணா இல்லத்தில் அக்கட்சியை சேர்ந்த மந்திரிகளின் ஆலோசனை கூட்டம் இன்று பிற்பகல் நடந்தது. பின்னர் 11 மந்திரிகளும் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டதாகவும் புதிய மந்திரிசபை விரைவில் அமைக்கப்படும் எனவும் முதல் மந்திரி குமாரசாமியின் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தற்போது நிலவிவரும் அரசியல்போக்கு தொடர்பாக தனக்கு எந்த வருத்தமும் இல்லை என குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of