மீமிசலில் CAA-க்கு எதிராக மாபெரும் பேரணி.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு..!

922

புதுக்கோட்டை மாவட்டம்,  மீமிசலில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக் கோரி அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் கடந்த சனிக்கிழமை அன்று கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த பேரணி மாலை 3.00 மணியளவில் கோபாலப்பட்டிணம் நுழைவு வாயிலில் இருந்து துவங்கி மீமிசல் முக்கிய கடைவீதி வழியாக சென்று மீமிசல் சந்தைப்பேட்டை வந்தடைந்தது.

அதனை தொடர்ந்து குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு குறித்தும், அதன் பாதிப்புகள் குறித்தும்  தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம். சரீப், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி,

அய்யா தர்மயுகவழி பேரவை நிறுவனர் திரு. அய்யாவழி P.பாலமுருகன், திரு விடுதலை தமிழ் புலிகள் கட்சி பிரமுகர் குடந்தை அரசன், பாதிரக்குடி அருட்திரு. ஜேசுராஜ் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

இந்த மாபெரும் கண்டன பேரணியில் பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் என சுமார் ஆயிரக்கணக்கானோர் கையில் தேசியக் கொடியுடன் பேரணியாகச் சென்று தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

 

Advertisement