எல்லாமே ஊழல் கட்சிகள்தான், அதனால இவருக்கு வாக்கு அளியுங்கள் – சர்ச்சை டுவிட் போட்ட சு.சாமி

934

சர்ச்சை கருத்துகளுக்கு பேயர் போன பா.ஜ.க தலைவர் சுப்ரமணியசாமி மீண்டும் ஒரு சர்ச்சைக்குள்ளாகும் வகையில் ஒரு டுவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், தமிழகத்திலுள்ள தேசியவாதிகள் டி.டி.வி.தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களுக்கு வாக்களிக்கவேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை அ.தி.மு.கவுடன் பா.ஜ.க கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. பா.ம.க, தே.மு.தி.க, த.மா.க ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்துள்ளன. இந்தக் கூட்டணிக்காக பிரதமர் மோடி தமிழகத்தில் பிரச்சாரத்தையும் மேற்கொண்டுள்ளார். ஆனால் பாஜாகவின் முன்னணி தலைவரும் சர்ச்சை டிவீட்டுகளுக்கு சொந்தக்காரருமான சு.சுவாமி தேசியவாதிகள் அனைவரும் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று டிவீட் செய்துள்ளார். மேலும் தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஊழல் கட்சிகளே, ஆனால் தேசிய ஒற்றுமைக்கு தீனகரன் ஒரு நல்ல அரசியல்வாதி என்றும் கூறியுள்ளார். இந்த சர்ச்சைக்குறிய பதிவினால் தமிழக பா.ஜ.க தலைவர்களும், உறுப்பினர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of