மின்சார ரயிலில் அனைவரும் பயணிக்கலாம்.. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு..

1487

பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக மின்சார ரயில்களில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. பின்னர், தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், அத்தியாவசிய பணிகளில் உள்ளவர்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சென்னையில் நாளை முதல் மின்சார ரயில்களில், பொதுமக்கள் அனைவரும் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 10 மணி முதல் 4 மணி வரை பயணிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் 10 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரை ரயிலில் பயணிக்க அனுமதி இல்லை என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவழி டிக்கெட் மட்டுமே பெற முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பயணம் செய்வதற்கு 10 நிமிடத்திற்கு முன்பு மட்டுமே, பயண டிக்கெட் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Advertisement