அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக சிறிசேன நடத்திய அனைத்துக்கட்சி கூட்டம் தோல்வி

343

இலங்கை நடைபெறும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக சிறிசேன நடத்திய அனைத்துக்கட்சி கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது.

இலங்கை அரசியலில் குழப்பங்களும், அடிதடி மோதலும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

இந்நிலையில்,  3 வாரங்களுக்கு மேலாக நீடித்து வரும் இந்த நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக அதிபர் சிறிசேன தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ரனில் விக்ரமசிங்கே, ராஜபக்சே மற்றும் கட்சி பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்த இந்த கூட்டம், எந்த வித முடிவுகளும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தது.