ஆல்இங்கிலாந்து பேட்மிண்டன்: முதல் சுற்றில் சிந்துக்கு கிடைத்த அதிர்ச்சி

171

ஆல்–இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்கியது. மொத்தம் ரூ.7 கோடி பரிசுத்தொகைக்கான ஆல்–இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காமில் இன்று (புதன்கிழமை) முதல் 10–ந்தேதி வரை நடக்கிறது.

தரவரிசையில் டாப்–32 வீரர், வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் இந்த போட்டியில் இந்தியர்களுக்கு முதல் சுற்றே கடினமாக அமைந்துள்ளது. ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான இந்தியாவின் பி.வி.சிந்து தனது முதல் சுற்றில் தென்கொரிய மங்கை சங் ஜி ஹயூனை எதிர்கொண்டார். முடிவில் தென்கொரிய வீராங்கனை சங் ஜி ஹைனிடம் 21-16, 20-22, 21-18 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

மேலும், சங் ஜி ஹயூன், கடந்த ஆண்டு ஹாங்காங் ஓபனில் சிந்துவை வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.