கொரோனா தடுப்பு: மூன்று மாநிலத்திற்கு நிதி வழங்கிய தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன்

813

கோரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்தார். இதனை மக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில் பிரதமர் மோடி, கொரோனாவை கட்டுப்படுத்த நாட்டுமக்கள் நிதியுதவியை அளிக்காலம் என கூறியுள்ளார்.

இதன் அடிப்படையில் சில தொழிலதிபர்கள் மற்றும் திரைப்பட நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு தரப்பில் இருந்து நிதி அளிக்கப்பட்டு வருகிறது.

தெலுங்கு திரைப்பட முன்னணி நடிகரான அல்லு அர்ஜூன் கொரோனாவை கட்டுப்படுத்த தனது நிதியுதவியை அளித்துள்ளார்.

இவரின் பங்களிப்பாக1.25 கோடி ரூபாயை ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, என மூன்று மாநிலத்திற்கு சேர்த்து மாநில அரசு நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.

இவர் கேரளாவுக்கும் மட்டும் நிதி அளிப்பது ஆச்சரியப்பட தேவையில்லை, ஏனெனில் தெலுங்கு நடிகர்களில் அல்லு அர்ஜுனுக்கு மட்டும் தான் கேரளாவில் அதிக ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

இவரது படங்கள் கேரளாவில் டப்பிங் செய்யப்பட்டு அங்கேயும் வசூலை அள்ளுகின்றன. எனவே தான் கேரளா மக்கள் மீது அதிக அன்பை வைத்து தன்னால் இயன்ற நிதியுதவியை அளித்துள்ளார்.