அலுமினிய முலாம் பூசப்பட்ட தங்கம். ஐவர் கைது.

275
rajivgandhi9.3.19

நேற்று வெள்ளியன்று ஹைதராபாதில் உள்ள ராஜிவ் காந்தி பன்னாட்டு விமானநிலையத்தில் சுமார் 90 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ கடத்தல் தங்கம் சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

துபாயில் இருந்து ஒரு தனியார் விமானசேவை மூலம் ஹைதராபாத் வந்த இருவர் சோதனைசாவடிகளை கடந்து செல்வதற்காக 4 பைகளில் சுமார் 3 கிலோ அலுமினிய முலாம் பூசப்பட்ட தங்கங்களை கடத்த முயற்சித்துள்ளனர்.

இவர்களை கையும் களவுமாக பிடித்த சுங்க அதிகாரிகள் இந்த தங்கத்தை வாங்கி செல்வதற்காக விமான நிலையத்தில் காத்திருந்த மூவரை கைது செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு மட்டும் சுமார் 9 கோடி மதிப்புள்ள 28 கிலோ தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் 13 பேர் கைதாகியுள்ளதாக ஆணையர் MMR ரெட்டி தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of