எனக்கு ரொம்பவும் புடிச்ச நடிகர் விஜய் தான் | Amala Paul

203

‘அதோ அந்த பறவை போல’, சில வருட போராட்டங்களுக்கு பின்னர் தற்போது இந்த படம் வெளிவர உள்ளது. முக்கிய கதாபாத்திரத்தில் அமலாபால் நடிக்க ஆக்‌ஷன் கலந்த அட்வெஞ்சர் திரில்லர் படமாக இது உருவாகியுள்ளது.

காட்டில் தனியாக சிக்கிக்கொண்ட பெண் எப்படி தப்பி வெளியே வருகிறாள் என்பது தான் கதைச்சுருக்கம் என்று இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமலா பால் கூறினார்.

இந்த படம் குறித்து தற்போது பேட்டியளித்துள்ள அமலா பால், எனக்கு விருப்பமா நடிகர்களில் ஒருவர் விஜய். நான் 10 வருடம் சினிமா துறையில் இருக்கிறேன். எனக்கு அதுவே கடினமாக உள்ளது சினிமாத்துறையில் போராட்டங்கள் அதிகம்.

பல விஷயங்களை இழக்க நேரிடும், ஆனால் விஜய் அவர்கள் இத்தனை வருடங்கள் தொடர்ந்து ஓயாமல் உழைத்துக்கொண்டிருப்பது சாதனை தான் என்று கூறினார். விஜய் ஒரு புத்தகம் போன்றவர். அவரிடம் இருந்து மற்றவர்கள் கற்றுக்கொள்ளலாம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of