முதல் போட்டியிலேயே 11 வருட சாதனையை முறியடித்த அல்ஜாரி ஜோசப்..,

551

அனல் பறக்கும் ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியும், மும்பை அணியும் ஐதராபாத் மைதானத்தில் மோதினர். இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய மும்பை அணி 136 ரன்களை எடுத்து தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியை ஆரம்பம் முதலே, மும்பை அணி தனது பந்து வீச்சின் மூலம் பயமுறுத்த தொடங்கினர்.

இதில், மும்பை அணியில் மலிங்கா இடம் பெறாததால் அவருக்கு பதில் வெஸ்ட் இண்டீஸின் இளம் வேகப்பந்து வீச்சாளரான அல்ஜாரி ஜோசப் இடம்பிடித்தார். இவருக்கு இதுதான் ஐபிஎல் அறிமுகம் போட்டி. ஐபிஎல் ஏலத்தின் போது இவரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. ஆடம் மில்னே-வை மும்பை அணி ஏலம் எடுத்திருந்தது. அவர் காயம் அடைந்ததால் அல்ஜாரியை மாற்று வீரராக தேர்வுசெய்தது.

ஆட்டத்தின் 5 வது ஓவரை அல்ஜாரி ஜோசப் வீசினார். முதல் பந்திலேயே வார்னரை க்ளீன் போல்டாக்கினார். தனது அறிமுகம போட்டியில் முதல் பந்திலே விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். அதோடு மட்டுமல்ல தொடர்ந்து தன்னுடைய அதிரடி அசுர வேகம பந்தை வீசி 3.4 ஓவரில் 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுக்கள் சாய்த்தார்.

இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் குறைந்த ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் கைப்பற்றிய முதல் வீரர் சாதனையைப் படைத்துள்ளார்.

இதற்கு முன் அறிமுக ஐபிஎல் தொடரான 2008 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய தன்வீர் சோஹைல் செனனைக்கு எதிராக 14 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியது ஐபிஎல் வரலாற்றில் சிறந்த பந்து வீச்சாக இருந்தது. தற்போது 11 வருடங்கள் கழித்து அல்ஜாரி ஜோசப் இந்த சாதனையை முறியடித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளரான ஆடம் ஜம்பா 19 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of