சிறந்த நேசத்துக்காகவும் காதலுக்காகவும் காத்திருக்கிறேன் | Shruti Hassan

361

தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு. தற்போது இவர் சினிமா பிரபலங்களை பேட்டி காணும் நிகழ்ச்சி ஒன்றை நடத்திவருகிறார். அண்மையில் இவர் நடிகை சுருதிஹாசனை பேட்டி எடுத்தார். அந்த பேட்டியில் சுருதிஹாசன் தனது காதல் வாழ்க்கையை பற்றி கூறியுள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய சுருதி, நான் இதுவரை ஒரே ஒருவரை தான் காதலித்துள்ளேன். நான் எதையும் எளிதாக எடுத்துக்கொள்வேன். அப்பாவியும் கூட. அதே நேரத்தில் மிகவும் உணர்வுபூர்வமானவள். எனவே தான் என்னை யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் காதலில் இருந்தது நல்ல அனுபவம். மீண்டும் காதலிக்க விரும்புகிறேன். சிறந்த நேசத்துக்காகவும் காதலுக்காகவும் காத்திருக்கிறேன்.

எனக்கு காதலராக வருபவர் நல்ல மனிதராக இருக்க வேண்டும். நகைச்சுவைத்திறன் இருக்கவேண்டும். சுத்தமாக இருக்கவேண்டும். அவ்வளவுதான்’ என்று கூறியுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of