மீண்டும் சர்ச்சையான படத்தில் நடிக்கும் அமலா பால் | Amala Paul

205

அமலா பால். ஆடை படம் வெளியான பிறகு அந்த படத்தில் ஆடை இன்றி நடித்திருந்த அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் அவர் மீண்டும் ஒரு சர்ச்சையான படத்தைத் தேர்ந்தெடுத்து நடிக்க உள்ளார். நெட்பிலிக்ஸ் இணையத்தில் ’லஸ்ட் ஸ்டோரீஸ்’ எனும் வெப்சீரிஸ் பெண்களுக்குக் காமத்தின் மீது இருக்கும் ஈடுபாட்டைச் சொல்லும் விதமாகக் கடந்த ஆண்டு வெளியானது.

இந்தியில் வெளியான இதில் கியாரா அத்வானி, ராதிகா ஆப்தே, மனிஷா கொய்ராலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த வெப்சீரிஸ் பல கடுமையான விமர்சனங்களை தாண்டி இந்திய அளவில் அதிக பேரால் பார்க்கப்பட்ட வெப்சீரிஸ் எனும் பெருமையை பெற்றது.

தற்போது இந்த வெப்சீரீஸை தெலுங்கில் திரைப்படமாக எடுக்க முடிவு செய்துள்ளனர். நான்கு கதைகள் கொண்ட இந்த படத்தை நான்கு வெவ்வேறு இயக்குநர்கள் இயக்கவுள்ளனர். இந்த படத்தில் அமலா பால், கியாரா அத்வானியின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of