மீண்டும் அவரோடு இணையும் ஆடை அமலா | Amala Pal | Vishnu

607

ஆடை, அண்மையில் அமலாபால் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மிக பெரிய அளவில் வரவேற்பை பெற்ற ஒரு திரைப்படம். தற்போது எஸ்.ஜே. சூர்யா அவர்களை வைத்து மான்ஸ்டர் என்ற படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கிறார்.

Amala

தெலுங்கில் ஹிட்டான ஜெர்சி படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாக உள்ளது. நானி நடித்த வேடத்தில் விஷ்ணுவிஷால் நடிக்கிறர். ஷ்ரத்தா ஸ்ரீநாத் வேடத்தில் அமலாபால் நடிக்கிறார். கிரிக்கெட் வீரரை பற்றிய உணர்வுபூர்வமான கதையாக இந்த படம் அமைந்திருந்தது.

amala-pal

ராட்சசன் படத்துக்குப் பிறகு விஷ்ணு விஷால், அமலாபால் இணைந்து நடிக்கிறார்கள். ராட்சசன் படத்தின் போதே இருவரும் காதலிப்பதாக கிசுகிசு பரவியது. இருவருமே அதை மறுத்தனர். இந்நிலையில், மீண்டும் இணைந்துள்ளனர்.

New-movie