அமலா பால் தந்தை பால் வர்கீஸ் இன்று காலமானார்

245

2009ம் ஆண்டு வெளிவந்த நீலத்தாமரா என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் அமலா பால், தமிழில் 2010ம் ஆண்டு வெளியான வீரசேகரன் மற்றும் சிந்து சமவெளி ஆகிய படங்களில் நடித்திருந்தாலும், பிரபு சாலமன் இயக்கிய மைனா படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.

இதனையடுத்து, நல்ல படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்களை அவர் பெற்றார். அண்மையில் ஆடை படத்தில் நடித்து சர்ச்சைக்கு உள்ளானாலும் அடுத்தடுத்த பட வாய்ப்புகளோடு சினிமாத்துறையில் பயணித்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு “அதோ அந்த பறவை போல” என்ற படத்திற்கான செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று பேசினார் அமலா பால், இந்நிலையில் அவருக்கு பெரும் அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. அமலா பால் அவர்களின் தந்தை பால் வர்கீஸ் இன்று காலமானார். அவருடைய இறுதி சடங்குகள் நாளை மாலை கேரளாவில் உள்ள குறுப்பம்படி என்னும் ஊரில் நடைபெற இருக்கிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of