விவாகரத்துக்கு காரணம் என்ன..? முதன்முறையாக மனம் திறந்த அமலா பால்..!

832

கடந்த சில வருடங்களுக்கு முன்பு இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும், நடிகை அமலா பாலுக்கும் திருமணம் நடைபெற்றது. சில ஆண்டுகள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.

இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த ஏ.எல்.விஜயின் தந்தை ஏ.எல்.அழகப்பன், தனது மகனுக்கு விவாகரத்தானதற்கு நடிகர் தனுஷ் தான் காரணம் என்றும், அவர் தான் திருமணத்திற்கு பிறகும் அமலா பால் நடிப்பதற்கு வாய்ப்பு அளித்தார் என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகை அமலா பால் விவாகரத்து ஏன் ஆனது என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், விவாகரத்து விவகாரம் தேவையில்லாத ஒன்று எனவும், அது தனது தனிப்பட்ட விஷயம் என்றும் தெரிவித்தார்.

மேலும், தான் விவாகரத்து பெற்றதற்கு வேறு யாரும் காரணம் இல்லை என்று கூறிய அமலா பால், தனுஷ் தனது நலம்விரும்பி என்று தெரிவித்தார். 2வது திருமணம் பற்றி பேசிய அவர், அதற்கு நீண்ட காலம் ஆகும் என்றும், விரைவில் நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.