ஆடைக்கு கிடைத்த வரவேற்பு..! இந்த முறை இப்படியொரு முயற்சி..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

536

மேயாத மான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் ரத்தினகுமார் இயக்கிய திரைப்படம் ஆடை. அமலா பால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இத்திரைப்படம் நல்லவொரு கருத்தை பதிவு செய்து, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் வெற்றியைத்தொடர்ந்து, அமலா பால் அடுத்ததொரு புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளார். அது என்னவென்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
நவீனமாக மாறி வரும் இந்த யுகத்தில் தற்போது சினிமா துறையும் டிஜிட்டல் வசமாக உள்ளது.

தற்போது நெட்பிளிக்ஸ் போன்ற டிஜிட்டல் மீடியாக்களில், வட மற்றும் தென்னிந்திய பிரபலங்கள் நடித்து வருகின்றனர். அந்த வகையில் லஸ்ட் ஸ்டோரிஸ் என்ற திரைப்படம் இந்தியில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த திரைப்படத்தில், பெண்களின் பாலியல் குறித்த முக்கியமான கேள்விகளும், விவாதங்களும் எழுப்பப்பட்டது. மேலும், இந்த திரைப்படம் சர்வதேச அளவில் கவனத்தை பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகை அமலா பால் நடிக்கவுள்ளார்.

ஆந்தலாஜி கதையமைப்பில் உருவான இத்திரைப்படத்தில், ராதிகா ஆப்தே ஏற்று நடித்த கதாபாத்திரத்தில், அமலா பால் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆடை படத்தில் நடித்ததன் மூலமாக சர்ச்சையில் சிக்கிய அமலா பால், தற்போது லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் நடிக்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எது என்ன ஆனாலும் சரி, முற்போக்கான திரைப்படங்களில் நான் நடித்துக்கொண்டே தான் இருப்பேன் என்று அமலா பால் இருந்து வருகிறார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of