மனைவியால் வசமாய் மாட்டிய தோனி..! – உச்சநீதிமன்றத்தில் சிக்கிய தோனியின் மனைவி..!

3769

அமரப்பள்ளி நிறுவனம் மீதான நிதி மோசடி வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில், தோனியின் மனைவி இயக்குநராக இருந்த நிறுவனம் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அமரப்பள்ளி என்ற தனியார் கட்டுமான நிறுவனம் தங்களிடம் பணம் பெற்றுக்கொண்டு வீடு கட்டித்தருவதாக கூறி ஏமாற்றிவிட்டது என்று பலர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

கிரிக்கெட் வீரர் தோனி, அமரப்பள்ளி நிறுவனத்தின் விளம்பர தூதராக இருந்த நிலையில், நிதி மோசடி சர்ச்சை காரணமாக அதில் இருந்து விலகினார். மேலும், ‘நானும் வீடு கட்ட அந்த நிறுவனத்திடம் முதலீடு செய்துள்ளேன். எனக்கு வீட்டை பெற்றுத்தாருங்கள் அல்லது முதலீடு செய்த பணம் திரும்பக் கிடைக்க வழிசெய்யுங்கள்’ என தோனி உச்ச நீதிமன்றத்தை நாடினார்.

அமரப்பள்ளி நிறுவனத்தின் ஒப்பந்தங்களை ஆய்வு செய்வதற்காக 2 ஆடிட்டர்களைக் கொண்ட சிறப்புக் குழு ஒன்றை உச்ச நீதிமன்றம் நியமித்தது. இந்தக் குழு ஆய்வுசெய்து, தற்போது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.

ஆடிட்டர் குழுவின் அறிக்கையில், தோனியின் மனைவி ஷாக்‌ஷி, அமரப்பள்ளி குழுமத்தின் கீழ் இயங்கும் அமரப்பள்ளி மகி என்ற நிறுவனத்தின் இயக்குநராக இருப்பது தெரியவந்தது. இந்த நிறுவனமும் பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் போட்டியின் போது ரிதி ஸ்போர்ட்ஸ் மற்றும் அமரப்பள்ளி மகி நிறுவனங்கள் சென்னை அணியின் ஸ்பான்ஸ்கர்களாக இருந்த நிலையில், பல கோடி ரூபாய் நிதி கைமாறியது தொடர்பாக முறையான ஒப்பந்தங்கள் இல்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமரப்பள்ளி நிறுவனத்தில் முதலீடு செய்த வீட்டு உரிமையாளர்களின் பணம் சட்டவிரோதமாகவும் தவறாகவும் ரிதி ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு திருப்பி விடப்பட்டிருப்பதாக நாங்கள் கருதுகிறோம் என்று ஆடிட்டர் குழு அறிக்கை அளித்துள்ளது.

ஆடிட்டர்கள் குறிப்பிட்ட நிறுவனங்கள், வீட்டு உரிமையாளர்களின் பணத்தை திருப்பி அளிக்க அந்தந்த இயக்குநர்களுக்கு உத்தரவிடுகிறோம். பணத்தை திருப்பி அளிக்காவிட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

பணப்பறிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதால், தோனியின் மனைவி ஷாக்‌ஷியும் விசாரணைக்கு உள்படுத்தப்படலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of