சென்னையில் இன்று “நிழலுக்கு விடுப்பு” வருடத்திற்கு இருமுறை வரும் அதிசய நிகழ்வு

655

சூரியன் தலைக்கு மேல் நேர்கோட்டில் இருக்கும்போது நிழலின் நீளம் புஜ்ஜியமாகிவிடுகிறது. அதாவது நிழல் காலுக்குக் கீழே இருக்கும்.

ஆனால் சூரியன் சரியாக தலைக்கு மேல் எப்பொழுதும் வருவதில்லை. ஆண்டுக்கு இருமுறை மட்டுமே வரும். அந்த நாளையே நிழல் இல்லாத நாள் அல்லது பூஜ்ய நிழல் என்று வானியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த நிகழ்வு எல்லா இடங்களிலும் ஒரே சமயத்தில் நிகழ்வதில்லை.

புதுச்சேரியில் இந்த அபூர்வ நிகழ்வு ஏப்ரல் 21-ந் தேதியும், ஆகஸ்டு 21-ந் தேதியும் நிகழும் என அறிவியல் இயக்கம் தெரிவித்து இருந்தது. அதன்படி கடந்த 21ம் புதுச்சேரி மக்கள் இந்த நிகழ்வை கண்டு ரசித்தனர்.

சென்னையில் இந்த அதிசய நிகழ்வை, பொதுமக்கள் காண்பதற்காக சென்னை பிர்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 12.07க்கு சூரியன் செங்குத்தாக தலைக்கு மேலே வந்தபோது, இந்த நிகழ்வை மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

சென்னை தவிர பெங்களூர் மற்றும் மங்களூரிலும் இந்த பூஜ்ய நிழலை கண்டுரசித்தனர். இதேபோல் ஆகஸ்ட் 18-ம் தேதியும் இந்த பூஜ்ய நிழலை பார்க்க முடியும் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement