“இனி கெத்து தான்..” இந்தியாவிற்கு வரும் புதையல்..! அமேசானின் அதிரடி பிளான்..!

451

இந்தியாவின் முதன்மையான ஆன்லைன் தளங்களின் பட்டியலில் முன்னணியில் இருப்பது என்றால் அது அமேசான் தான். இந்த நிறுவனம் குறித்து மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்தியாவில் அமேசான் பில்லியன் டாலர்கள் அளவு முதலீடு செய்வதன் மூலம் எந்த நன்மையும் இல்லை என்றும், இதனால் எந்த வகையிலும் இந்தியா பயனடையப்போவதில்லை என்றும் கூறியிருந்தார்.

இதற்கு பதலளிக்கும் வகையில், 2025-ம் ஆண்டுக்குள் ஒரு மில்லியன் வேலைவாய்ப்புகளை இந்தியாவில் உருவாக்க இருப்பதாக அமேசான் நிறுவனர் ஜெஃப் பிஸாஸ் தெரிவித்திருக்கிறார்.

மேலும், இந்தியாவில் 10 மில்லியனுக்கும் மேலான சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகர்களை ஆன்லைன் வணிகத்துக்கு அறிமுகப்படுத்தவும், 5 லட்சத்து 50 ஆயிரம் வணிகர்களின் வணிகத்தை மேம்படுத்தவுமே இந்த ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களைப் பயன்படுத்தப் போவதாகத் தெரிவித்திருக்கிறார் ஜெஃப் பஸாஸ்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of