கமலா ஹாரிஸ்.. இனபாகுபாடு.. பொதுமக்கள் கண்டனம்.. அதிரடியாக நீக்கிய அமேசான்..

705

சென்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலரி கிளின்டனை வீழ்த்தி, டெனால்ட் டிரம்ப் ஆட்சியை பிடித்தார். அவரது ஆட்சியில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் அமெரிக்காவில் எடுக்கப்பட்டது.

டிரம்பின் ஆட்சிக்காலம் முடிவடைய இருப்பதால், நவம்பர் 3-ஆம் தேதி அன்று தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில், துணை அதிபர் பதவிக்காக, இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிட இருக்கிறார்.

இவர் போட்டியிட இருப்பதாக அறிவிப்பு வெளியான நாட்களில் இருந்து டிரம்ப் பல்வேறு குற்றச்சாட்டுகளை கமலா ஹாரிஸ் மீது சுமத்தி வருகிறார்.

இதற்கிடையே, அமேசான் நிறுவனத்தில், 3-ஆம் தரப்பு வியாபாரி ஒருவர், இனபாகுபாட்டை ஆதரிக்கும் வகையிலும், கமலா ஹாரிசை விமர்சித்தும் டீ-சார்ட் ஒன்றை தயாரித்து விற்பனைக்கு வைத்துள்ளார்.

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்ததையடுத்து, அந்த டீ-சார்ட்டை அமோசான் நிறுவனம் நீக்கியுள்ளது. இதுமட்டுமின்றி, அந்த வியாபாரி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அமேசான் தலைமை நிர்வாகி உறுதி அளித்துள்ளார்.