“நல்ல ரேட்டுக்கு வித்துட்டேன்..” அமேசானில் ஆர்டர் செய்தவருக்கு பகீர்..

6632

டெல்லியில் உள்ள கிட்வாய் நகரை சேர்ந்தவர் அமேசான் மூலமாக செல்போன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அந்த செல்போன் நீண்ட நாட்களாகியும் டெலிவரி செய்யப்படவில்லை.

இதனால் அமேசானின் கஸ்டமர் கேருக்கு அழைப்பு விடுத்து, செல்போன் பற்றி கேட்டுள்ளார். அதற்கு உங்களுடைய ஆர்டர் ஏற்கனவே டெலிவரி செய்யப்பட்டுவிட்டது என்று பதில் அளித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தினர். அதில், டெலிவரி பாயே செல்போனை திருடி, வேறொரு நபருக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, செல்போன் திருடனை கைது செய்த போலீசார், அவன் விற்பனை செய்த செல்போனையும் மீட்டு, புகார் அளித்தவரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement