ஐ-போன் ஆர்டர் செய்தவருக்கு சோனி போனை டெலிவரி செய்த அமேசான்…!

233

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் அமேசானில் முன்பணமாக ரூபாய் 58,410 செலுத்தி ‘iphone XR’ மாடல் ஆப்பிள் போன் ஆர்டர் செய்துள்ளார்.

Related image

கடந்த 3-ம் தேதி ஆர்டர் செய்த அவர், தந்தையின் பெயரில் டெலிவரி செய்ய பதிவு செய்துள்ளார்.  அடுத்த நாள் அமேசான் டெலிவரி பாய் அவரின் தந்தையிடம் ஒரு பாக்ஸை கொடுத்துள்ளார்.

பின்னர் அவர் பாக்ஸை பிரித்தபோது ஐ-போன் நிறுவன கவரை பிரித்தபோது உள்ளே சோனி நிறுவனத்தின் ’Xperia’ மாடல் போன் இருந்துள்ளது.  அந்த போன் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பழைய போனாக இருந்துள்ளது.  இதுகுறித்து அவர் உடனடியாக அமேசான் வாடிக்கையாளர் மையத்தை தொடர்பு கொண்டு நடந்ததை தெரிவித்தார்.

இதற்கு அமேசான் வாடிக்கையாளர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். ஆனால் ஒருவாராமாகியும் அவர்கள் தகுந்த பதில் அளிக்கவில்லை.  பின்னர் போலீசில் புகார் அளித்துள்ளார்.  போலீசார் வழக்குப்பதிவு செய்து அமேசான் தலைமையகத்திற்கு தெரியப்படுத்தினர்.

போலீசார் தலையிட்டதும் இந்த பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கிறோம் என உறுதியளித்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of