அம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..

2904

இந்தியாவில் ஜனநாயகம், சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு கருத்துகள், இன்றளவும் நிலைத்து நிற்கிறது என்றால், அதற்கு காரணம் இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம்.

இதனை உருவாக்கியவர்களில் மிக முக்கியமான ஒருவர் டாக்டர் பீமாராவ் அம்பேத்கர். இன்று அவரது 129-வது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரை பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்களை தற்போது காண்போம்..

1. மத்திய பிரதேசத்தில் மாஹோவ் என்ற பகுதியில் 1891-ஆம் ஆண்டு அம்பேத்கர் பிறந்தார். அந்த பகுதி 2003-ஆம் ஆண்டு அன்று அம்பேத்கர் நகர் என்று அப்போதைய மாநில அரசால் மாற்றப்பட்டது.

2. 1956-ஆம் ஆண்டு போதிச்சட்டவா விருது, 1990-ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது, 2012-ஆம் ஆண்டு தலைசிறந்த இந்தியன் என்ற விருது உட்பட பல்வேறு விருதுகளையும், அங்கீகாரங்களையும் அம்பேத்கர் பெற்றிருக்கிறார்.

3. அம்பேத்கர் அவரது குடும்பத்தில் 14-வது குழந்தையாக பிறந்தவர். அதுமட்டுமின்றி, அவர் தான் கடைசியாக பிறந்த குழந்தை.

4. பிங்காலி வெங்கையா என்பவர் இந்தியாவின் தேசிய கொடியை உருவாக்கியபோது, அதில் 3 வண்ணங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தது. இதையடுத்து, அதில் அசோக சக்கரமும் இடம்பெற வேண்டும் என்று கூறியவர் அம்பேத்கர் தான்

5. இந்தியாவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக கருதப்படும் அம்பேத்கர், 64 பாடங்களில் முதுகலை பட்டம் பயின்றவர். மேலும், இந்தி, பாலி, சமஸ்கிருதம், மராத்தி, குஜராத்தி, ஆங்கிலம், ஃபிரன்ஞ், ஜெர்மன், பெர்ஷியன் ஆகிய 9 மொழிகளில் புலமை பெற்றவராகவும் அம்பேத்கர் திகழ்ந்தார்.

6. அம்பேத்கருக்கு நவீன புத்தர் என்ற பட்டம் அவரது இளமை காலத்தில் வழங்கப்பட்டது. இந்த பட்டம், புத்த மதத்தின் மிகமுக்கிய துறவியான மஹாந்த் வீர் சந்திரமணி என்பவரால், அம்பேத்கருக்கு வழங்கப்பட்டது. மேலும், புத்த மதத்தை அம்பேத்கருக்கு அறிமுகப்படுத்தியவரும் இவர் தான்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of