ரஷ்யாவின் விபரீத சோதனை.. பாய்ந்து வந்த அமெரிக்கா & இங்கிலாந்து..

987

ஜூலை 15 ம் தேதி ரஷ்யா விண்வெளி அடிப்படையிலான செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுத சோதனையை நடத்தியது என்றும், இதற்கான ஆதாரங்கள் அமெரிக்க விண்வெளி அமைப்பிடம் உள்ளது எனவும் தகவல் வெளியானது.

இந்த வகையான செயல்கள் விண்வெளியின் அமைதியான பயன்பாட்டை அச்சுறுத்துவதாக உள்ளது என்றும் செயற்கைக்கோள்கள் மற்றும் உலகம் சார்ந்திருக்கும் விண்வெளி அமைப்புகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய குப்பைகளை ஏற்படுத்தும் என அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

மேலும் இதுபோன்ற எந்தவொரு சோதனையையும் தவிர்க்க ரஷ்யாவை நாங்கள் கேட்டு கொள்கிறோம் என இங்கிலாந்தின் விண்வெளி மையமும் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த வார சோதனையை நடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட அமைப்பு, இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு அமெரிக்க அரசாங்க செயற்கைக்கோளின் அருகே வந்தபோது விண்வெளி அமைப்பு சமிஞ்கைகளை எழுப்பியது என்று அமெரிக்க விண்வெளி மையமான நாசா கூறியுள்ளது.