பாதுகாப்புத் துறைக்கு ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பில் ஒப்பந்தம்..!

178

இந்தியா – அமெரிக்கா இடையே பாதுகாப்பு துறை தொடர்பாக 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அகமதாபாத்தில் நடைபெற்ற நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என பல மதத்தினர் ஒற்றுமையாக வசிப்பதாக பாராட்டு தெரிவித்தார்.

இந்தியாவும், அமெரிக்காவும் பயங்கரவாதத்தை ஒழிக்க இணைந்து செயல்படும் என்றார். இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கு நவீன ஆயுதங்களை வழங்க தயாராக உள்ளதாகவும், இந்தியாவுடன் பாதுகாப்பு, வர்த்தகம் ஆகியவற்றில் இணைந்து பணியாற்றுவோம் என்றும் தெரிவித்தார்.

இந்தியா தனது இதயத்தில் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது என்றும் ட்ரம்ப் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அதிபர் டிரம்ப், அன்று தேநீர் விற்றவர், இன்று நாட்டின் பிரதமராக பொறுப்புவகிப்பது பெருமைக்குரியது என்று தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of