H1B விசாவுக்கு தளர்வுகளை அறிவித்த அமெரிக்கா

546

H1B விசாவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென அமெரிக்கா தளர்வுகளை அறிவித்துள்ளது. H1B விசா ஊழியர்கள் தங்களது குடும்பத்தினரை அழைத்துவரலாம் என்றும் அறிவித்ததுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜூன் 22ம் தேதி எச்1பி விசாவுக்கு இந்தாண்டு இறுதிவரை தடை விதிக்கப்பட்ட நிலையில் அமெரிக்கா தளர்வு அறிவித்துள்ளது.

ஏற்கனவே வேலை பார்த்தவர்கள் எச்1பி விசா மூலம் மீண்டும் அமெரிக்கா திரும்பி பணியாற்றலாம் என்றும், ஏற்கனவே தாங்கள் வகித்த வேலையில் சேர்ந்து மீண்டும் பணியாற்றுவதாக இருந்தால் மட்டுமே அமெரிக்கா திரும்பலாம் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

எச்1பி விசா ஊழியர்கள் தங்களது மனைவி, பிள்ளைகளையும் அழைத்து வரலாம் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.