வெளிநாட்டு மாணவர்கள்..! அமெரிக்கா எடுத்த அதிரடி நடவடிக்கை..!

1048

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருவதால், பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் நடப்பு கல்வியாண்டிற்கான பாடங்களை ஆன்லைன் மூலம் எடுத்து வருகின்றன.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அதிபர் டிரம்ப் நிர்வாகம், ஆன்லைன் வகுப்புகளை நடத்தும் பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்று வரும் வெளிநாட்டு மாணவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் அறிவித்தது.

50-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் அரசுக்கு எதிராக ஓரணியில் திரண்டதால் வெளிநாட்டு மாணவர்களுக்கு எதிரான இந்த உத்தரவை திரும்பப் பெறுவதாக டிரம்ப் நிர்வாகம் கடந்த வாரம் அறிவித்தது.

இந்நிலையில், அமெரிக்காவில் முழுவதும் ஆன்லைன் மூலம் பாடம் நடத்தும் பல்கலைக்கழகங்களில் புதிதாக கல்வி பயில வரும் வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அந்நாட்டின் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு அந்நாட்டு குடியுரிமைத் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மார்ச் 9-ம் தேதிக்கு பின்னர் பல்கலைக்கழகங்களில் சேர்க்கப்படாமல் உள்ள மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் சேர விரும்பினால் அவர்களுக்கு விசா வழங்கப்பட மாட்டாது.

அவர்கள் அமெரிக்காவில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மார்ச் 9-ம் தேதிக்கு முன்னர் கல்வி விசாக்களைப் பெற்ற வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் நுழைவதற்கு தடை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement