பல சிறுமிகளை சீரழித்த அமெரிக்க தொழிலதிபர் மர்ம மரணம்..!

613

பதினெட்டு வயதுக்கும் குறைவான சிறுமிகளுடன் பாலுறவு கொண்டதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் புகழ்பெற்ற நிதி முதலீட்டு நிர்வாகிகளில் ஒருவரான ஜெப்ரே எப்ஸ்டெய்னின் உடல், சனிக்கிழைமை சிறையில் கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் தமது சிறை அறையில் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று கருத்துப்படுகிறது.

2002 முதல் 2005 வரை 18 வயதுக்கும் குறைவான பல சிறுமிகளுடன் பாலுறவு கொண்ட குற்றச்சாட்டுகளின் பேரில் கைதான அவர் மீது, பாலுறவுக்காக சிறுமிகளைக் கடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

2005இல் அவரால் பாதிக்கப்பட்டதாக 14 வயது சிறுமி ஒருவரின் குடும்பம் புகார் கூறியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளியில் தெரியவந்தது.

2002இல் ஓர் ஊடக நேர்காணலில், “அவர் ஒரு பயங்கரமான ஆள்; என்னைப்போலவே அவருக்கும் அழகான பெண்களைப் பிடிக்கும் என்று கூறுகிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் இளம் பெண்கள்,” என்று இப்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருந்தார்.

66 வயதான எப்ஸ்டெய்ன், கடந்த மாதம் சிறையில் பாதி மயங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அது ஒரு தற்கொலை முயற்சி என்று அப்போது கூறப்பட்டது.