அடுக்குமாடியில் விழுந்த விமானம் – விமானி பலி

190

அமெரிக்காவில் குட்டி விமானம் ஒன்று அடுக்குமாடி குடியிருப்பில் விழுந்து விபத்துக்குள்ளாகி விமானி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பார்ட் லாடர்டேல் நகரில் இருந்து ‘பைபர் பி-25’ ரக குட்டி விமானம் புறப்பட்டு சென்றது. இதில் ஒரு விமானி மட்டும் இருந்தார்.

JET ACCIDENT
விமானம் பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர் அந்த விமானம் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மீது விழுந்து நொறுங்கியது.

இதில் விமானி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.