இந்தியா – அமெரிக்கா உறவு குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கருத்து

554

இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவை புதிய உச்சத்திற்கு இட்டுச் செல்ல அமெரிக்கா விரும்புவதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

வரும் 24ம் தேதி முதல் 7 நாட்களுக்கு இந்தியா, இலங்கை, ஜப்பான், தென் கொரியா ஆகிய 4 நாடுகளில் மைக் பாம்பியோ பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இந்நிலையில், இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவு குறித்த கருத்தரங்கில் பேசிய அவர், இந்தியாவில் நரேந்திர மோடியும், அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப்பும் தலைமைப் பொறுப்பில் இருப்பது மிகவும் அரிதான வாய்ப்பு என்று கூறினார். இதன் மூலம், இரு நாட்டு மக்களின் நலன்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் இணைந்து மேற்கொள்ளப்படும் என மைக் பாம்பியோ குறிப்பிட்டார்.

மிகச்சிறந்த திட்டங்களும், மிகப்பெரிய வாய்ப்புகளும் இரு நாட்டு உறவை புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்லும் என்றும் அவர் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தவும், தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக கடும் நிலைப்பாட்டை மேற்கொள்ளவும் அமெரிக்க அரசு முன்னுரிமை அளித்து வருவதாகவும் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of