அமெரிக்காவிற்கு பதிலடி கொடுத்த இந்தியா

750

அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதியாகும் 28 பொருட்களுக்கு, நேற்று (ஞாயிற்றுகிழமை) முதல் அதிக வரி விதிக்கப்படும் என்று இந்தியா அறிவித்துள்ளது.

எஃகு மற்றும் அலுமினியம் உள்ளிட்ட இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அதிக வரிகளில் இருந்து விலக்கு அளிக்க அமெரிக்கா மறுத்ததைத் தொடர்ந்து இந்தியா இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனால் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதியாகும் 28 அமெரிக்க தயாரிப்பு பொருட்கள் இந்தியாவில் அதிகமான விலைக்கு விற்பனையாகும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் பொருளாதார விவகாரத்தில் மோடி- ட்ரம்ப் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of