“ஏன் இந்த வீண் செலவு” – இந்தியாவை கிண்டல் செய்த அமெரிக்க ஊடகம்

1609

குஜராத் மாநிலத்தில் 3000 கோடி ரூபாய் செலவில் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு 182 மீட்டரில் மிக உயரமான சிலை அமைக்கப்பட்டது.

ஒற்றுமையின் சிலை என பெயரிடப்பட்டுள்ள இந்த சிலையை குஜராத்தின் நர்மதா ஆற்றங்கரையோரம் பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 31ஆம் தேதி திறந்து வைத்தார். இந்த சிலையின் கட்டுமான பணிகளுக்கு, கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி மோடி அடிக்கல் நாட்டினார். இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளன்று, இந்த சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

நியூயார்க்கின் சுதந்திரதேவி சிலை, சீனாவின் ஸ்பிரிங் கோவில் புத்தர் சிலைகளை விட, பட்டேலின் சிலை உயரமானதாகும். 3,500 டன் வெண்கலம், 70,000 மெட்ரின் டன் சிமெண்ட், 24,500 மெட்ரின் டன் இரும்பு கொண்டு இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இந்தியாவில் அமைத்துள்ள பட்டேலின் சிலையை கிண்டல் செய்துள்ளனர்.

“தி டெய்லி ஷோ வித் ட்ரெவோர் நோவா” (The Daily Show with Trevor Noah) என்ற அந்த யூ டியூப் பக்கத்தில் India Erects a Record- Breaking Statue என்கிற தலைப்பில் ஒரு கானொளி வெளியிடப்பட்டுள்ளது. அதில் 400 மில்லியன் டாலர் செலவில் இந்தியாவில் ஒரு சிலை தேவையா, இந்தியா என்ன செய்து கொண்டிருக்கிறது என்று அதன் செய்தியாளர் கேள்வி எழுப்புகிறார்.

மேலும் இந்தியாவில் சிலைகளை கட்டகூடாது என்று சொல்லவில்லை, ஏன் காந்தியின் சிலை ஒன்றை அவர்கள் நிறுவக்கூடாது,? அவர் மிகவும் பிரபலமானவர்..உடலில் குறைவாகவே துணி அணிந்திருப்பார், உடலும் மெலிவாக இருக்கும், உங்களுக்கு சிலை கட்டுமானத்திற்கான பொருட்களும் குறைந்து இருக்கும், அதே உயரத்தில் சிலையும் பாதி செலவு குறைந்து இருக்கும் என்று கிண்டல் செய்துள்ளனர்.

Advertisement