சீனாவில் இருந்து வந்த “ பிளாக்” நோய் தான் கொரோனா

740

அமெரிக்காவில் கொரோனா வைரஸ்  நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதனிடையே, அந்நாட்டில் மொத்தமாக 28 லட்சத்து 36 ஆயிரத்து 875 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வரும் நவம்பரில் அந்நாட்டில் அதிபர் தேர்தலும் நடக்க இருப்பதால், கொரோனா பிரச்சினை டிரம்பிற்கு பெரும் தலைவலியாக உள்ளது.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டிரம்ப்  “கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து வந்த “பிளேக்” நோய் என்றும், சீனா நினைத்திருந்தால் கொரோனா பரவலை தடுத்திருக்கலாம், ஆனால். சீன பரவ அனுமதித்து விட்டது எனவும் குற்றம்சாட்டினார்.

சீனாவில் கொரோனா பரவிய போது சீனாவுடன் புதிதாக வணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக கூறிய அதிபர் டிரம்ப், கையெழுத்திட்ட மையின் ஈரம் காய்வதற்குள் கொரோனா வேகமாக பரவிவிட்டது” என குற்றம்சாட்டினார்.

Advertisement