உலக பயங்கரவாதிகளை அமெரிக்கா குண்டு வீசி அழித்த காட்சி..! திக்.. திக்.. திக்.. வீடியோ..!

910

சிரியாவின் இட்லி பகுதியில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதி பதுங்கி இருப்பதாக அமெரிக்க ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் அல்-பாக்தாதி பதுங்கி இருந்த கட்டடத்தை சுற்று வளைத்த அமெரிக்க ராணுவத்தினர், அதிரடியாக தாக்குதல் நடத்தினர்.

அங்கிருந்து வெளியேற வழி இல்லாததால், தன் உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்க செய்து அல்-பாக்தாதி உயிரிழந்தார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அண்மையில் வெளியிட்டார்.

அல்-பாக்தாதி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வீடியோவை விரைவில் வெளியிடுவோம் எனவும் தெரிவித்தார்.

அந்த வகையில், அல்-பாக்தாதி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான புகைப்படங்கள் மற்றும், வீடியோவை அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ளது.