145 இந்தியர்கர்களை கை, கால்களை கட்டி விமானம் மூலம் திருப்பி அனுப்பிய அமெரிக்கா..!

1213

விசா உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இல்லாத 145 இந்தியர்கர்களை கை, கால்களை கட்டி விமானம் மூலம் அமெரிக்கா திருப்பி அனுப்பியுள்ளது.

அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் விசா உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இல்லாத 145 இந்தியர்களை அமெரிக்கா திருப்பி அனுப்பி உள்ளது. இதில் 142 பேர் ஆண்கள், 3 பேர் பெண்கள்.

இவர்களில் பெரும்பாலானோர் 20 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டு இவர்கள் அனைவரும் ஒரே விமானத்தில் டெல்லி விமானநிலையம் வந்தனர்.

விமான நிலையத்தில் இவர்களது ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சரிபார்த்த பின்னர் அனைவரும் விமான நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு அவர்களது ஊருக்கு அனுப்பப்பட்டனர்.

முன்னதாக இவர்களது கைகள், கால்கள் கட்டப்பட்டிருந்தது. டெல்லி வந்த பிறகு தான் அவை அவிழ்த்து விடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement