கொலை வெறி.. கையில் பயங்கர துப்பாக்கியுடன் வந்த இளைஞரை கட்டிப்பிடித்த பெண்.. இறுதியில் நடந்த அடடே சம்பவம்..!

757

கொலை வெறியுடன் துப்பாக்கியுடன் போன இளைஞனை கப்பென இறுக்கமாக கட்டிப்பிடித்து விட்டார் அந்த பெண்.. இப்படி கட்டிப்பிடித்ததும் அந்த இளைஞன் பெண்ணிடம் சிக்கி திணறி விட்டார்!

அமெரிக்காவில் ஒன்றும் இல்லாத விஷயத்துக்குகூட துப்பாக்கியை தூக்கிவிடுவார்கள் என்பது தெரிந்த விஷயம்தான்.. இது அந்நாட்டு குழந்தைகள் வரை பரவியுள்ள கலாச்சாரம் ஆகும்.

அப்படித்தான் ஒரேகான் மாகாணத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஒரு இளைஞருக்கு தன் தோழி மீது செம கடுப்பு. பயங்கரமான கோபம் வந்துவிட்டதால், கொலை செய்துவிடலாம் என்று நினைத்து துப்பாக்கியை எடுத்து கொண்டு கிளம்பினார்.

அந்த பெண்ணையும் கொன்று, அங்கேயே தானும் செத்துவிடலாம் என்று தீர்க்கமாக முடிவு எடுத்தார். அந்த பெண், அங்கு செயல்பட்டு வரும் ஒரு பள்ளியில் இருப்பதால், இளைஞனும் துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்தார். இப்படி ஸ்கூலுக்கு துப்பாக்கியுடன் ஆவேசமாக இளைஞர் வருவதை பள்ளியின் கால்பந்தாட்ட பயிற்சியாளர் பார்த்துவிட்டார்.

அதனால் நேரடியாக இளைஞனை தாக்கினால் வம்பாகிவிடும் என்பதால், நாசூக்காக அந்த துப்பாக்கியை மட்டும் எப்படியாவது வாங்கிவிடலாம் என்று முயற்சித்தார். ஆனால், அந்த பயிற்சியாளரை இந்த இளைஞர் கண்டுகொள்ளவே இல்லை.

ஆவேசமாக வந்த இளைஞரை பார்த்ததும், ஒரு பெண் கிளாஸ் ரூமில் இருந்து வெளியே ஓடிவந்தார்.. துப்பாக்கியுடன் இளைஞர் நடந்து வருவதை கண்டு பயப்படவே இல்லை.. நேராக இளைஞர் முன்னாடியே போய் நின்று, அவரைகெட்டியாக கட்டிப்பிடித்து கொண்டார்.

 

இறுக்கமாக கட்டிப்பிடிக்கவும், அந்த இளைஞனால் எதுவுமே செய்யமுடியாமல் திணறினார். பெண் கட்டிப்பிடிக்கவும் திக்குமுக்காடி கொண்டிருந்த நேரம் அந்த, பயிற்சியாளர் வந்துவிட்டார்.

அப்போதுதான அந்த துப்பாக்கைய அவரால் பறிக்க முடிந்தது. நீண்ட நேரம் அந்த பெண் இளைஞனை கட்டிப்பிடி வைத்தியம் தந்ததில் இளைஞர் சமாதானம் ஆனார்.. ஆவேசம் குறைந்தது.. மனசு மாறியது.

“இனி நான் கொல்ல மாட்டேன்.. நானும் தற்கொலை செய்து கொள்ள மாட்டேன்.. ஏனென்றால், என் தோழி எனக்கு திரும்பவும் கிடைத்துவிட்டார்” என்று அந்த பெண்ணை பார்த்து சொன்னார்.

இதன்பிறகு போலீசார் நடத்திய விசாரணையில், அந்த இளைஞன் அந்தபள்ளியின் முன்னாள் மாணவன் என்பது தெரியவந்தது. தமிழ்நாடாக இருந்தாலும் சரி, அமெரிக்காவாக இருந்தாலும் நம்ம கட்டிப்பிடி வைத்தியத்துக்கு ஒரு மவுசு இருக்கத்தான் செய்யுது!