இந்திய தேசிய கீதத்திற்கு அமெரிக்க ராணுவம் செய்த கௌரவம்..! நெகிழ்ச்சி வீடியோ..!

825

இந்தியா மற்றும் அமெரிக்க வீரர்கள் கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்ளும் தளத்தில், அமெரிக்க ராணுவ வீரர்கள் இந்திய நாட்டின் தேசிய கீதத்தை வாசித்தது, இந்திய ராணுவ வீரர்கள் மட்டுமல்லாது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இந்தியா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த வீரர்கள், கூட்டு ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டனர். கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த பயிற்சி, இரு நாடுகளின் பாதுகாப்புக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்திய ராணுவ வீரர்களுக்காக, அமெரிக்க வீரர்கள் இந்தியாவின் தேசிய கீதத்தை இசைத்து பாடியுள்ளனர்.

கடந்த வாரம், இந்தியாவின் ராணுவ வீரர்களை புகழும் பிரபல ஹிந்தி பாடலை பாடி அமெரிக்க வீரர்கள் அசத்திய நிலையில், தற்போது இந்திய தேசிய கீதத்தை வாசித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.