“இறுக அணைத்தார்.. முத்தமிட்டார்..” டிரம்ப் மீது பரபரப்பு புகார்..! நடிகையின் பேட்டி..!

633

அமெரிக்க அதிபரின் ஆட்சிக்காலம் முடிவடைய இருப்பதால், நவம்பர் 3-ஆம் தேதி அன்று தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலையொட்டி, மிகத்தீவிரமான முறையில் டிரம்ப் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில், அமெரிக்க மாடல் நடிகை ஏமி டோரிஸ், கார்டியன் என்ற பத்திரிகைக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “1997 ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த டென்னிஸ் தொடரின் போது, நானும் டிரம்பும் கலந்துக்கொண்டோம்.

அப்போது, என் விருப்பத்திற்கு மாறாக டிரம்ப் இறுக அணைத்ததார், முத்தமிட்டார். அவரது பிடியில் இருந்து வெளியே வர முயன்றேன். ஆனால் முடியாமல் போனது” என்று தெரிவித்துள்ளார்.

தேர்தல் நெருங்கி வரும் இந்த சமயத்தில், மாடல் நடிகையின் பேட்டி, அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 12-க்கும் மேற்பட்ட பாலியல் குற்றச்சாட்டுக்கள் டிரம்ப் மீது எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.