“இது அதுல..,” – அமெரிக்கா வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சி..!

1115

உலகில் இன்றளவும் மர்மமாக இருக்கக்கூடிய விஷயங்களில் மிகமுக்கியமான ஒன்று ஏலியன்கள். வேற்றுகிரகவாசிகள் என்று அழைக்கப்படும் இந்த ஏலியன்கள் இருக்கின்றனவா அல்லது இல்லையா என்ற கேள்வி பல ஆண்டு காலமாகவே மக்களிடையே இருந்து வருகிறது.

இதைப்பற்றிய பேச்சு எப்போது எழுந்தாளும், சிறிது நேரத்திற்கு பரபரப்பு இருந்து கொண்டு தான் இருக்கும். மிகப்பெரும் அறிவியல் மேதையான ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற அறிவியலாளர்கள் கூட ஏலியன்கள் இருப்பது உண்மை என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த உண்மைக்கு இன்னும் வலுசேர்க்கும் விதமாக அமெரிக்க கடற்படை புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தில், கருப்பான ஒரு பொருள், வான்பகுதியில் பறந்துக்கொண்டிருக்கிறது. இந்த வீடியோவில் இருக்கும் அந்த மர்ம பொருள் எது என்பது குறித்து அமெரிக்க கடற்படை தெரிவிக்கவில்லை.

இருப்பினும் இந்த வீடியோ உண்மையானது என்று தெரிய வந்துள்ளது. கடந்த 2004 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. இந்த புகைப்படம் இணையதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

இவ்வளவு பெரிய பேரண்டத்தில் எதாவது ஒரு மூலையிலாவது வேற்றுகிரகவாசிகள் இருப்பார்கள் என்பதும், அவர்கள் என்றாவது ஒரு நாள் பூமிக்கு வந்து மனிதர்களை அடிமைப்படுத்தும் அபாயமும் இருப்பதாக சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த புகைப்படம் வெளியானதால், அந்த நாள் நடக்க அதிகம் வாய்ப்பு இருப்பதாக பொதுமக்களால் நம்பப்படுகிறது.