“டிராப்பிக்கில் இருந்து தப்பிக்கனுமே..” முதியவர் செய்த பகீர் செயல்..! அதிர்ந்த போலீஸ்..!

408

அமெரிக்காவில் ஒரு சில மாகாணங்களில் மட்டும் ஒருவருக்கு மேல் காரில் பயணம் செய்தால், அவர்களுக்கென தனி வழித்தடம் உள்ளது. இந்த வழித்தடத்தில் வாகன நெரிசல் இருக்காது என்பதே அதன் சிறப்பு அம்சம்.

இந்நிலையில் அரிசோனா மாகானத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் அந்த சிறப்பான வழித்தடத்தில் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக, மனித எலும்புக்கூடுக்கு உடைகளை அணிவித்து தலையில் ஒரு தொப்பியை வைத்துள்ளார்.

இதனை பார்த்த அதிகாரிகள் காரில் யாரோ அமர்ந்திருப்பதாக நினைத்துக்கொண்டு அந்த சிறப்பான வழித்தடத்தில் பயணம் செய்ய அனுமதி அளித்தனர். ஆனால், சிறிது தூரம் முதியவர் சென்றதும், சந்தேகமடைந்த அதிகாரிகள் மீண்டும் காரை பரிசோதித்து காரில் இருந்தது எலும்புக்கூடு தான் என்று கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அந்த முதியவருக்கு காவல்துறையினர், அபராதம் விதித்தனர். மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும் போலீசார் எச்சரித்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of