மேலாடை அணியாமல் விருது வாங்கிய பிரபல பாடகி..! அதிர்ந்த பிரபலங்கள்..! இப்படி ஒரு காரணமா..?

1267

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் லத்தீன் கிராமி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. திரைத்துறையை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த விழாவில், சிலி நாட்டை சேர்ந்த 36 வயதான பிரபல பாப் பாடகி மோன் லாஃபர்டேவும் கலந்து கொண்டார்.

விருது வழங்கும் விழாவிற்கு அவர் வரும்போது, ஒட்டுமொத்த மீடியாவும் அவரையே அதிர்ச்சி கலந்த கண்ணோடு கண்டது. காரணம், அவர் மேலாடை அணியாமல் நிகழ்ச்சியில் வந்திருந்தது தான்.

மேலும், அவரது மார்பகத்தில், அவர்கள் டார்ச்சர் செய்கிறார்கள், பலாத்காரம் செய்து கொன்றுவிடுகிறார்கள் என்று சிலி மொழியில் எழுதியிருந்தது. இதற்கு முக்கிய காரணம் என்வென்றால், கடந்த மாதம் போக்குவரத்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டதற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் மூண்டது.

இதனை கட்டுப்படுத்த போலீசார் எடுத்த நடவடிக்கையில் 20 பேர் கொல்லப்பட்டனர். இதனை கண்டிக்கும் வகையில் பாடகி மோன் லாஃபர்டே மேலாடை இன்றி விருதை பெற்றார். மேலும், அந்த விருதை சிலி மக்களுக்கு சமர்ப்பிப்பதாகவும் அவர் கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of