அசுத்தமான இந்தியா.. டிரம்பால் கொந்தளித்த இந்தியர்கள்..

3670

அமெரிக்க அதிபர் தேர்தல் விவாதத்தில் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியதை ஆதரிக்கும் வகையில் பேசிய டொனால்டு டிரம்ப், இந்தியா, சீனா மற்றும் ரஷியாவில் காற்று ‘அசுத்தமாக’ உள்ளது என கூறினார்.

டிரம்பின் இந்த கருத்து பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, இதில் உள்நோக்கம் உள்ளதாகவும் கருதப்படுகிறது.

டிரம்பின் இந்த கருத்தால், இந்தியர்கள் கொந்தளித்துள்ளனர். இது அங்கு நடைபெறும் அதிபர் தேர்தலிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, டிரம்பின் கருத்துகள் குறித்து பேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கபில் சிபல், இருநாட்டு தலைவர்களுக்கு இடையே உள்ள தோழமை இதுதானா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement