இறுக்கம் இல்லாத உள்ளாடை..! இவ்வளவு நன்மையா..? ஆய்வின் அசத்தல் ரிசல்ட்..!

1514

சமீபகாலமாக ஆண்மைத் தன்மை குறைதல் பிரச்சனைகள் இந்தியாவில் உள்ள ஆண்களுக்கு அதிகரித்துக்கொண்டு வருகிறது. இந்தப் பிரச்சனைக்கு பலரும் பல்வேறு காரணங்களை தெரிவித்து வருகின்றனர்.

அதில் பொதுவாக அனைவரும் குறிப்பிடும் காரணம் என்பது இறுக்கமான உள்ளாடை அணிவது தான். இதுகுறித்து அமெரிக்காவின் ஹார்வர்டு டிஹெச் சான் பொது சுகாதார கல்லூரியை சேர்ந்த ஆய்வாளர்கள் 656 ஆண்களிடம் ஆய்வை நடத்தியுள்ளனர்.

அந்த ஆய்வின் முடிவில், இறுக்கமான உள்ளாடை (ஜட்டி) அணிவோரைவிட இறுக்கமற்ற உள்ளாடை அணிந்தோர் 25 சதவீத அதிக விந்தணு எண்ணிக்கை கொண்டவராக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காரணம் தவிர்த்து, உடல் பருமன், சுடு நீரில் குளித்தல், புகைப்பிடித்தல் போன்ற காரணங்களினாலும் இது வேறுபடும் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.