“ஏலியன் இருக்கு..?” ஏலியன்ஸ் சொன்ன 3 முக்கிய தகவல்கள்! அமெரிக்க விஞ்ஞானிகளால் பரபரப்பு!

2367

அமொரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள வேற்று கிரக நுண்ணறிவுகளை தேடும் திட்ட அமைப்பு வேற்று கிரகவாசிகள் குறித்த ஆழமான விண்வெளி ஆய்வுகளின் தொகுப்பை இதுவரை இல்லாத அளவுக்கு வெளியிட்டு உள்ளது.

இது குறித்து திட்ட விஞ்ஞானி டாக்டர் டேனி பிரைஸ் கூறுகையில், பூமியோடு தொடர்பு கொள்ளும் முயற்சியாக வேற்றுக் கிரகத்தைச் சேர்ந்த உயிரினங்கள் மூன்று விரிவான தகவல்களைப் பூமிக்கு அனுப்பியுள்ளன என்றார்.

அமெரிக்காவின் நாசா ஆய்வு மையம், ரஷ்ய நாட்டைச் சேர்ந்த விண்வெளி ஆய்வு மையம் ஆகிய இரண்டு அமைப்புகளும் தான், வேற்றுக் கிரக உயிரினங்கள் அனுப்பிய தகவல்களை பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கிடைத்த தகவல்கள் குறித்து விண்வெளி ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருவதாகவும், தகவல்கள் குறித்து அவர்களால் தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

பூமியை விட்டு மிகத் தொலைவில் உள்ள விண்மீன் ஒன்றிலிருந்து கிடைத்துள்ள சமிக்கைகள் குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் ஏலியன் இருக்கு என்று சொல்பவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.